கல்லூரியிலேயே மாணவி குத்திக் கொலை...தானும் அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயற்சி - மாணவன் செயலால் அதிர்ச்சி
பெங்களூருவில், கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு புறநகர் மாவட்டம் எலகங்கா பகுதியை சேர்ந்த லயசிதா என்ற இளம்பெண், தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து.
பி.டெக் படித்து வந்தார். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பவன் கல்யாண் என்ற இளைஞர், லயசிதாவை சந்திக்க, அவரது கல்லூரிக்கு வந்துள்ளார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், லயசிதாவை பவன் கல்யாண் குத்திக் கொலை செய்தார்.
பின்னர் அவரும், கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை முயன்றார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான விசாரணையில், காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது