கேரள மாநிலம் திரிச்சூர் அருகே வலம் வரும் குட்டி யானையின் தும்பிக்கையை யார் துண்டித்தது என வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திரிச்சூர், அதிரப்பள்ளி எண்ணெய் பனை தோட்டத்தில் ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்துள்ளது
அதில் தும்பிக்கை இல்லாத குட்டி யானையை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
அது குறித்து விசாரித்து வரும் வனத்துறை அதிகாரிகள், யானையின் தும்பிக்கை பிற விலங்குளால் தாக்கப்பட்டதா அல்லது வலையில் இழுத்து அறுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தும்பிக்கை இல்லாமல் எவ்வளவு நாட்கள் யானை வாழும் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.