மனைவி இறந்த துக்கம் தாளாமல் உயிர்விட்ட கணவர் - அடக்கம் செய்த மறுநாள் வந்த மகனுக்கு அதிர்ச்சி
- மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆவடி பக்தவச்சலபுரம் ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்த 65 வயதான சரஸ்வதி இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், 77 வயதான அவரது கணவர் முத்துவீரன் துக்கம் தாளாமல் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்த அவர்களது மகன் தணிகைவேல் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.