ஆவடி அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தவறவிட்ட 40 சவரன் தங்க நகைகளை 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகி. இவர் தன் மகனுடன் இருசக்கரவாகனத்தில் செல்லும் போது 40 சவரன் தங்க நகையை தவறவிட்டதாக கூறி போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் சாலையின் சிசிடிவியின் காட்சியை சோதனை செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தில் இருந்து பை ஒன்று கீழே விழுந்தும், அதனை நபர் ஒருவர் பாதுகாப்பாக எடுத்து வைப்பதும் பதிவாகியிருந்தது.