6 அடகு கடைகளுக்கும் ஒரே பார்முலா...ஆவடியை அலறவிட்ட மாஸ்டர் மைண்ட்...தட்டித்தூக்கிய சென்னை போலீஸ்

ஆவடி அருகே, போலி நகையை அடகு வைத்து, தொடர் மோசடியில் ஈடுபட்டுவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-12-23 17:21 GMT

ஆவடி கோயில் பதாகை பகுதியை சேர்ந்த புகாராஜ் அடகுக்கடையில் வெங்கடேசன் என்பவர் 3 சவரன் நகையை அடமானம் வைத்து, 75 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இதற்கிடையே, அந்த நகையை சோதித்து பார்த்ததில், அது போலி நகை என தெரிய வந்துள்ளது. இது குறித்து புகாராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு அடகு கடையில், போலி நகையை அடமானம் வைக்க சென்றபோது, வெங்கடேஷ் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இதனிடையே அவர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் அதே பகுதியில் 6 கடைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து, 4 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், ஏமாற்றும் பணத்தில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வெங்கடேஷுக்கு அளிக்கப்படுவதாகவும், மற்ற பணத்தை போலி நகையை தயார் செய்து தரும் நபர் எடுத்துக் கொள்வதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனிடையே போலி நகைகளை தயார் செய்து தந்த நபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்