மதுபோதையில் தகராறு -ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பாறசாலை அருங்காடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், ரிஜு, ராஜி ஆகியோர் மது பாட்டிலை உடைத்து ரஞ்சித்தின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், விபின் என்பவரையும் தாக்கியதாக தெரிகிறது. உடனடியாக, இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ரஞ்சித் உயிரிழந்தார். இதனிடையே, ரிஜு, ராஜியை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.