சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..

Update: 2022-12-13 04:56 GMT

சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, சன்னிதானத்திற்கு செல்லும் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், கேரளா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கு விசாரணையின் போது,18-ம் படியில் புதிதாக 100 ரிசர்வ் பெட்டாலியன் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை கூடுதலாக 420 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. கோவிலின் சுற்று பிராகாரமான சந்திரானந்தன் வீதி வழியாக பக்தர்களை அனுமதிப்பதில்லை என்றும் சன்னிதானம் சென்று , திரும்பும் பாதையை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்