10,11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!"இனி இது கிடையாது" -பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

Update: 2022-12-22 02:13 GMT

தமிழ்நாட்டில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரிக்க, மாணவர்களிடம் bonafide எனப்படும் உறுதிச் சான்றிதழை பெறுமாறு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் தமிழ் அல்லது ஆங்கில வழியில் படித்தது குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளான நிலையில், தற்போது பொதுத்தேர்வு பெயர் பட்டியலுக்கு உறுதிச் சான்றிதழ் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டங்களில் மட்டும் இவ்விவரங்களை பெற கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்