குடும்பமாக தீ குளிக்க முயற்சி.. 'EX MLA' மீது பகீர் புகார் - சென்னையில் பயங்கரம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு ஆண், பெண் குழந்தைகள் உட்பட ஒரு ஆறு பேர் திடீரென கையில் கோரிக்கை மனுவடன் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர். விசாரணையில், திருப்பூரை சேர்ந்தவர்கள் என்றும், தங்களது ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை, காங்கேயம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நடராஜன் அபகரித்து கொண்டதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.