ATM -ஐ உடைத்து கொள்ளை முயற்சி - 48 மணி நேரத்தில் செக் வைத்த போலீசார்

Update: 2023-04-16 03:01 GMT

காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் பகுதியில் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் நுழைந்த நபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது, போலீசார் ரோந்து பணியில் வந்ததால், அந்நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். இதில், யுவராஜ் என்ற நபர் குடிபோதையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்க முயன்ற நபரை, போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்