ஒரு லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் சபாநாயகர் அப்பாவு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்

Update: 2022-09-14 10:59 GMT


நெல்லையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் சபாநாயகர் அப்பாவு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.

பனை மரங்களை பாதுகாக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகள் வேளாண்துறை மூலம் நடப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பரில் ராதாபுரத்தில் இருந்து 1 லட்சம் பனை விதைகள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான ஒரு லட்சம் பனை விதைகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நான்கு லாரிகள் மூலம் சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்