செந்தில் பாலாஜி கைது..உடனே முதல்வர் எடுத்த நடவடிக்கை - அண்ணாமலை கேட்ட கேள்வி

Update: 2023-06-16 08:31 GMT

எதிர்க்கட்சியாக இருந்தபோது சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்த நிலையில், ஆளுங்கட்சியானவுடன் சி.பி.ஐ அனுமதி பெற்று உள்ளே வரவேண்டுமென கூறுவதா? என முதலமைச்சருக்கு, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு முன், மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று முதலமைச்சர் முடிவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில் சி.பி.ஐ விசாரணை கோரியதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, இப்போது ஆளும் கட்சி ஆன பின்பு சிபிஐ அனுமதி பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் தனிச்சிறப்பு வாய்ந்த, பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்