நள்ளிரவில் பாஜகவினர் அதிரடி கைது..போலீசார் குவிப்பு கும்பகோணத்தில்..பரபரப்பு

Update: 2023-06-27 19:06 GMT

பள்ளிக்கு பாதை அமைத்து தர வேண்டி போராட்டம் கும்பகோணத்தில் நடத்தி கைது செய்யப்பட்ட பிஜேபியினரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது ஏராளமான கட்சியினர் குவிந்ததால் பதட்டம் பரபரப்பு.. ஏராளமான போலீசார் குவிப்பு கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பாதை அமைப்பு தர வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் 25க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் தஞ்சை மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், நகரத் தலைவர் வெங்கட்ராமன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தற்போது நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர் அங்கு ஏராளமான பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து கொண்டு செல்ல நீதிபதி உத்தரவிட்டதால் தற்போது நீதிமன்றம் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.. எட்டு பேரும் நீதிமன்றத்திற்குள் தற்போது....

Tags:    

மேலும் செய்திகள்