பிரியாணியால் ஏற்பட்ட தகராறு..கணவன் மனைவிக்கு நடந்த சோகம் - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்
பிரியாணியால் ஏற்பட்ட தகராறு..கணவன் மனைவிக்கு நடந்த சோகம் - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்
சென்னையில் பிரியாணி வாங்கி தராததால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் தீக்குளித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் வசித்து வந்த முதியவர் கருணாகரன். இவர் தனியாக சென்று பிரியாணி சாப்பிட்டதாக கூறி இவரின் மனைவி பத்மாவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கருணாகரன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், மனைவி கருணாகரனை கட்டி அணைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பலத்த தீக்காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சம்பவம் நடைபெற்ற அன்றே மனைவி உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த கணவனும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.