காலநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளைத் தவிர்க்க பி.டெக்., sustainability எனும் புதிய படிப்பை சென்னை ஐஐடி தொடங்க உள்ளதாக அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், உலகெங்கும் சுற்றுசூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் கார்பன் அளவை பூஜ்யமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
அந்த இலக்கை அடைவதற்கு உதவும் புதுமைப் படைப்புகளைக் கண்டறிய சென்னை ஐஐடி போட்டி ஒன்றை நடத்த இருப்பதாகவும், அந்தப் போட்டியில் வெல்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்