போலீசாரை சுற்றி வளைத்த சமூகவிரோதிகள்.. கத்தி, கற்களால் கொடூர தாக்குதல் - ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் சமூக விரோதிகள் தாக்கியதில் 7 போலீசார் பேர் படுகாயமடைந்தனர்.
மாண்ட்வா பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசாரை சுற்றி வளைத்து சமூக விரோதிகள் கத்தி மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர். போலீசாரிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கி சுடவும் முயன்றுள்ளனர். எதிர்பாராத இந்த தாக்குதலில் போலீசார் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராய்ப்பூரில் சிகிக்சைக்காக மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.