அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி - திருச்சியில் பரபரப்பு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திருச்சி முசிறியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். முசிறியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் நடராஜன். தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிந்து சோதனை நடத்தினர். இந்நிலையில், நடராஜனின் வீடு மற்றும் அவருக்கு சொந்மான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், பல சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.