கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா விரைவு ரயிலில், மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சென்னையில் இருந்து புறப்பட்ட ஆலப்புழா விரைவு ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு 1.30 மணிக்கு விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்தது. நெருப்பு வேகமாக பற்றி எரிவதை கவனித்த ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நெருப்பை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் சேதம் அடைந்த பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடயவியல் குழுவினர் அந்த பெட்டியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.