6 மாத சிசுவை நாய்க்கு இரையாக்கிய அடையாளம் தெரியாத நபர்.. உருக்குலைந்த நிலையில் கிடந்த கொடூரம்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் 6 மாத சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போடிநாயக்கனூரில் உள்ள வஞ்சி ஓடைப் பகுதியில், பச்சிளம் குழந்தையை நாய் கடித்து குதறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உருக்குலைந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்தப் பகுதியில் கிடந்த சிசுவின் தலைப்பகுதியையும், ரத்தக் கறைகளுடன் இருந்த துணிகளையும் சேகரித்து போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறப்பதற்கு முன்பே அந்த சிசுவை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.6 மாத சிசுவை நாய்க்கு இரையாக்கிய அடையாளம் தெரியாத நபர்.. உருக்குலைந்த நிலையில் கிடந்த கொடூரம்