குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை... முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி -சிறப்பு அதிகாரியை நியமித்து அசத்தல்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது .
இதையடுத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்
இதை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் யார் யாருக்கு இத்தொகை வழங்குவது என்பது குறித்தும் அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையி்ல் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பயனாளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே பாடநுால் மற்றும் கல்விச்சேவை கழகத்திற்கான மேலாண் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.