அம்மா உணவகம் செலவு.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் விடுதிகள் முறையாக அனுமதியுடன் செயல்படுகிறதா, வரிகள் செலுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தணிக்கைகுழு தலைவர் தனசேகரன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர்,
அம்மா உணவகத்தில் வருவாயை விட 8 கோடி ரூபாய் அதீத செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்து தணிக்கை செய்யப்படுமென ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.