அமெரிக்க மாகாணமான ஓஹியோவில் உள்ள பள்ளியில் கால்பந்து போட்டியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விட்மர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக விளையாட்டரங்கில் இருந்த மாணவர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.