5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தை தட்டித்தூக்க அம்பானிக்கும் அதானிக்கும் போட்டா போட்டி - நொடிக்கு நொடி பரபரப்பு

Update: 2022-08-01 03:19 GMT

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் இதுவரை மொத்தம் 37 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 1 லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலத்தை அரசு பெற்றுள்ளது.இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம், 6 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கவுதம் அதானியின், அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் ஏலத்தில்1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருந்தது. 2-ஆம் நாள் முடிவில் இந்த தொகை1 லட்சத்து 49ஆயிரத்து ,454 கோடி வரை கேட்கப்பட்டது. ஐந்தாம் நாள் ஏலத்தின் முடிவில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடியை தாண்டியது. இதனிடையே ஆறாவது வது நாள் ஏலத்தின் 37 சுற்றுகள் முடிவில் ஏலத்தொகை 1 லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்