அதிரடியாக 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான் | Amazon layyoffs | Workers

Update: 2023-01-06 09:22 GMT

18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக, உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டன. கொரோனா ஊரடங்குகளின் போது, ஆன்லைன் வர்த்தகம் வெகுவாக அதிகரித்தால், அமேசானின் ஊழியர்கள் எண்ணிக்கை 2020-21இல் இரு மடங்காக அதிகரித்து, 15.4 லட்சமாக அதிகரித்தது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடு தளத்தப்பட்ட பின், கடந்த ஆண்டு நவம்பரில் 10 ஆயிரம் ஊழியர்களை அமேசான் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், மேலும் 18 ஆயிரம் ஊழியர்கள் ஆமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாஸி, ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழல் காரணமாக18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்