அமேசான் அதிரடி முடிவு - 10,000 ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் | Amazon

Update: 2022-11-29 15:48 GMT

அமேசான் நிறுவனம், இந்தியாவில் சில பிரிவுகளை மூட திட்டமிட்டுள்ளதால், நூற்றுக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதால், அதன் தலைமை செயல் அதிகாரி ஏன்டி ஜேசி செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளினாலும், ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட்டின் ஃபிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் கடும் போட்டியினாலும், இந்தியாவில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் உணவு விநியோகம், சிறு நிறுவனங்களின் முகவரிகளுக்கான நுகர்பொருட்கள் விநியோக சேவை ஆகிய பிரிவுகளை மூடப் போவதாக அமேசான் முடிவு செய்துள்ளது. அமேசான் இந்தியா நிறுவனத்தில் தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சில நூறு பேர் பணியிழக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்