அஜித் ஆரம்பித்த AK Moto நிறுவனம்...A to Z இருக்கு.. கவலையே வேண்டாம்..! - சாகச பிரியர்களுக்கு வரப்பிரசாதம்
அஜித் குமார் தொடங்கியிருக்கும் AK Moto Ride நிறுவனம் எவ்வாறு செயல்படும் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
டுபு.. டுபு.. டுபு... என்ற புல்லட் சத்தம்... இதயத்தை இதமாக்கும் இயற்கை... மனதை மயக்கும் பறவைகளின் கீச்சல்கள்... இவையோடு தேவையென்றால் கூடுதலாக குதூகலிக்கச் செய்யும் இசை என பைக் ரெய்டு சென்றால் அத்தனை ஆனந்தம்...
ஆனால் இவையெல்லாம் எளிதாக அமைந்துவிடுமா...? என்ற கேள்விதான் பொதுவாக வரும்.. மச்சான் நம்ம பைக்கில் டூருக்கு போறோம், கலக்கிறோம் என சொல்லிவிட்டு கடைசியில் கம்பியை நீட்டும் பிரன்ஸ்களால் பல ப்ளான்கள் பிளாப் ஆகியிருக்கும்..
இதுவே வெளி மாநிலம், வெளிநாடு என்றால், எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வியே ஆசையை மூட்டைக்கட்டி விட்டு அடுத்த வேலைக்கு செல்ல செய்துவிடும். இல்லையெனில் எப்பா என்னிடம் நல்ல லுக்கான பைக் இல்லை.. அங்கு சென்றால் யார் உதவுவார் என்ற கேள்வியும் ஜகா வாங்கச் செய்யும்.
இப்படிப்பட்ட சங்கடங்களை எல்லாம் தீர்த்து ஒரு இனிமையான சுற்றுலா பைக் ரைடுக்கு உதவுவதே Moto Ride நிறுவனம். அதாவது நல்ல பைக்கை வாடகைக்கு வழங்குவது, சுற்றுலா செல்லும் இடத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய உதவுவது, மொழி தடுமாற்றத்தை தீர்த்து வைக்க உதவுவது, பாதுகாப்பையும் உறுதி செய்வது என சகல வசதியையும் செய்து கொடுக்கும் சுற்றுலா நிறுவனம்...
இப்போது அஜித்தும், சாகச பயணம் மேற்கொள்வோருக்கும், பைக் ரெய்டு பிரியர்களுக்கு இப்படியொரு அனுபவத்தைதான் கொடுக்கவிருக்கிறார்.
இந்தியா, நேபாளத்தில் உலக பைக் ரைடு பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் விரைவில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அஜித், AK Moto Ride நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். பைக் ரைடர்களுக்கு தாங்கள் விரும்பும் அட்வென்ச்சர் சூப்பர் டூரிங் பைக்குகள் அளிக்கப்படும் என்கிறது ஏகே மோட்டோ ரைடு நிறுவனம்.
ரெய்டு செய்யும் போது என்ன செய்யலாம்... செய்யக்கூடாது என்பதை நிறுவனம் விவரிக்கும். ரைடு செல்லும் வழித்தடம்... மொழித்தடையை சரிசெய்ய பைக் சுற்றுலாவில் அனுபவம் பெற்ற தொழில்முறை வழிகாட்டிகளை கொண்டு உதவுவோம் என AK Moto Ride தெரிவித்துள்ளது. அதாவது பைக் ரைடு செல்வோருக்கு ஏ டூ இசட் வரையில் அத்தனை உதவிகளையும் செய்யும்...
பைக் ரைடிங்குக்கான பேக்கேஜ்... எப்படி பதிவு செய்வது எங்கெல்லாம் AK Moto Ride நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளது என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். எது எப்படியோ விரைவில் தல நிறுவனத்திலிருந்து உலகம் முழுவதும் பைக் ரைடு செல்ல, பைக் ரைடு பிரியர்கள் தயாராக இருக்கலாம்...