அஜித்குமாரின் துணிவு படத்தின் டிரெய்லர் 3 கோடி பார்வைகளை கடந்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியான படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, யூடியூபில் டிரெண்டானது.
இதனால் பார்வைகள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்ததாக படக்குழு வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.