மீண்டும் கோடி கணக்கில்... பிரதமரை சந்தித்த பின் குட் நியூஸ் சொன்ன அமேசான் CEO
இந்தியாவில் அமேசான் நிறுவனம் மேலும் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அண்டி ஜெசி சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்தார். மேலும் தற்போது வரை அமேசான் நிறுவனம் இந்தியாவில் 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டார்.