மீண்டும் மீண்டும் அதே மோசடி.. ஒட்டுமொத்த தமிழகமே ஏமாறும் சோகம்

Update: 2023-06-12 05:27 GMT

கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக ஐஸ்வரியம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்த‌து. இங்கு நிரந்தர வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 4 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்த‌தால், 200க்கும் மேற்பட்ட பலர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் நிதி நிறுவனம் மூடப்பட்டதால், திருச்சியில் உள்ள உரிமையாளர் ராஜேஷ் கண்ணாவிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது, ராஜேஷ் கண்ணா அளித்த காசோலைகள், பணம் இல்லாமல் திரும்பியதால், பாதிக்கப்பட்டவர்கள் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில், தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீசார், உரிமையாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை நீதிபதி இல்லத்தில் ஆஜப்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்