நீண்ட நேரம் காத்திருந்து சரமாரியாக தாக்கிய மர்மகும்பல்.. வீடு திரும்பிய வழக்கறிஞருக்கு அரங்கேறிய கொடூரம் - சென்னையில் பயங்கரம்
சென்னை பெருங்குடியில், மர்மநபர்களால் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெருங்குடியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். தனது சக வழக்கறிஞர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, இரவு ஜெய்கணேஷ் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டின் அருகே, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர், வழக்கறிஞர் ஜெய்கணேஷை ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து நிலைகுலைந்து சாய்ந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெய்கணேஷை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் மற்றும் சக வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.