அதானி குழுமத்தை 2016 ஆம் ஆண்டு தொடங்கி விசாரித்து வருவதாக கூறுவதில் உண்மை இல்லை என உச்சநீதிமன்றத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்புடைய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதானி குழும புகார் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு செபிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 6 மாதம் அவகாசம் கோரி செபி மனு தாக்கல் செய்திருந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான நிபுணர் குழு அறிக்கையை ஏற்கெனவே தாக்கல் செய்திருப்பதாகவும், 6 மாதம் அவகாசம் கோருவது நியாயமல்ல என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், அதானி குழுமத்தை 2016 ஆம் ஆண்டு தொடங்கி விசாரித்து வருவதாக கூறுவதில் உண்மை இல்லை என, உச்சநீதிமன்றத்தில் புகார் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வழக்கு ஜூலை மாதம் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.