“கணவனின் ஆபாச வாய்ஸ்.. வாட்ஸ்அப்பில் டார்ச்சர்“ - நள்ளிரவில் பரபரப்பை கிளப்பிய நடிகை ரக்‌ஷிதா

Update: 2023-06-21 09:34 GMT

தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சியமானவர் நடிகை ரக்‌ஷிதா... பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் புகழின் அடுத்த கட்டத்திற்கு சென்ற இவர், தனது வாழ்க்கையும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என நினைத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்....ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதற்கு முன்பு அவர் விட்டு சென்ற பிரச்சனைகளும், சர்ச்சைகளும் அவர் பிக்பாஸூல் இருந்து வெளியே வந்தபோதும் அவரை காத்திருந்து துரத்தி வருகிறது....சீரியலில் நடிக்கும்போது உடன் நடித்த நடிகர் தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்ட ரக்‌ஷிதா, சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார்... இருவரும் போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், திடீரென இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது..டிவி ஷோக்களிலும், சீரியல்களிலும் சிலருடனான ரக்‌ஷிதாவின் பழக்கம் கணவர் தினேஷிற்கு பிடிக்காததே, இந்த கருத்து வேறுபாட்டிற்கு காரணம் என கூறப்படுகிறது.....

சீரியல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஒருவர் மீது தினேஷ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, சின்னத்திரை வட்டாரத்தில் அன்று பரபரப்பை ஏற்படுத்தியது...இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து தனியே வசித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ரக்‌ஷிதா, இதனால் ஏற்பட்ட வலிகளை பிக்பாஸில் அவ்வப்போது வெளிக்காட்டி வந்ததை பார்க்க முடிந்தது... இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் மாஸ்டர் ஒருவருடனான ரக்‌ஷிதாவின் பழக்கத்தை சமூக வலைதளத்தில் இணையவாசிகள் பூதாகரமாக்கியது, இருவரிடையேயான கருத்து வேறுபாட்டை மேலும் ஆழமாக்கியது.... இதையடுத்து, பிக்பாஸில் இருந்து வெளியே வந்த நடிகை ரக்‌ஷிதா, தனது கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தற்போது அளித்திருக்கும் புகார் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது...

மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த ரக்‌ஷிதா, தான் தினேஷை பிரிந்து தனியே வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாச வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸப்பில் அனுப்பி தினேஷ் தொல்லை கொடுப்பதாகவும், அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்....இந்த புகாரின் பேரில், தினேஷை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்திய போலீசாரிடம், ரக்‌ஷிதாவிற்கு விவகாரத்து வேண்டுமானால் நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தினேஷ் தெரிவித்து சென்றதாக கூறப்படுகிறது இதன் பிறகு விசாரணைக்காக அழைக்கப்பட்ட ரக்‌ஷிதா, தனது வழக்கறிஞருடன் காவல்நிலையம் வந்து சென்றார்... ஏற்கெனவே, சீரியல் ஜோடி திவ்யா - அர்ணவ் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது ரக்‌ஷிதா - தினேஷ் ஜோடியின் பிரச்சினை சினிமா வட்டாரத்தில் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்