கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை குஷ்புவின் சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாழ்க்கை பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது என வருத்தத்துடன் பதிவுட்டுள்ளார். மேலும், அவருடைய அன்பும், வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், எனது சகோதரருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.