அடிக்கடி பாலியல் தொல்லை தந்த முதலாளி.. வேலைக்கார பெண் செய்த தரமான சம்பவம்

Update: 2022-11-05 02:23 GMT

சென்னை பள்ளிக்கரணையில், பர்னிச்சர் கடையில் வேலை பார்த்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தேவி என்பவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் விற்பனையாளராக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார். கடையின் உரிமையாளர் அருண்குமார், தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாகவும், அதற்கு உடன்படாததால், தன்னையும், தனது குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அருண்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்