ராங் ரூட்டில் தாறுமாறாக கார் ஒட்டி எதிரே வந்த வாகனங்களை இடித்த இளைஞர் - சென்னையில் பரபரப்பு
மதுபோதையில் தவறான பாதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...
பெங்களூருவை சேர்ந்த அழகு ரகுபதி என்ற இளைஞர், சென்னை போரூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இரவு 11 மணியளவில் குடிபோதையில் கே.கே.நகர் பி.டி. சாலையில் காரில் பயணித்துள்ளார். அப்போது, ராங் ரூட்டில் சென்ற இவரது கார் எதிரே வந்த பெண்மணி ஓட்டிவந்த கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களின் மீதும் மோதியுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அழகு ரகுபதியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், யாரும் புகார் அளிக்காததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.