பொன்னேரியில் பாதாள சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்து இளைஞர் ஒருவர் தத்தளித்துள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரை மீட்ட நிலையில், 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஜேசிபி மூலம் இரு சக்கர வாகனமும் சேதமடைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னேரி பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்