பாட்டி வீட்டுக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை காவு வாங்கிய கிணறு

Update: 2023-06-11 06:06 GMT

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே, கிணற்றில் மூழ்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். தாரமங்கலத்தைச் சேர்ந்த பூபதி என்பவர், சாணாரப்பட்டியிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பூபதி, அங்குள்ள விவசாய கிணற்றில் சிலர் குதித்து விளையாடுவதை பார்த்து, தானும் குதித்ததாக தெரிகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடிய, சிறுவனை சடலமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்