விஜய் சந்திப்பு நிகழும்போதே திமுகவுக்கு தாவிய 'விஜய் மக்கள் இயக்க' கவுன்சிலர் - இதனால் திமுக வசமான நகராட்சி..!

Update: 2022-12-13 12:48 GMT

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் நகராட்சி நகர்மன்றத் தலைவர் உட்பட 6 பேர் திமுகவில் இணைந்து கொண்டனர். சுயேட்சை நகர்மன்றத் தலைவரான விஜய் கண்ணன், விஐய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் வேல்முருகன் உட்பட 6 சுயேட்சை கவுன்சிலர்கள், திருச்செங்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தனர். இதன் மூலம், 20 கவுன்சிலர்கள் திமுக வசம் உள்ளதால், சுயேட்சை வசம் இருந்த குமாரபாளையம் நகர் மன்றம் தற்போது திமுக வசம் சென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்