பீகார் மாநில அரசியலில் திருப்புமுனை? - ராகுல் வழியில் பிரசாந்த் கிஷோர்

Update: 2022-10-03 07:08 GMT

ராகுல் காந்தியை போலவே, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் தனது பாதயாத்திரயை பீகாரில் தொடங்கியுள்ளார்.பீகார் மாநிலத்தில் பிறந்தவரான பிரசாந்த் கிஷோர், புதிய கட்சி தொடங்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மகாத்மா காந்தி தனது முதல் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிஸ்திஹாவ்ரா ஆசிரமத்தில் இருந்து தனது பாதயாத்திரையை பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார். 15 மாதங்களுக்கு பீகார் மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தனது இந்த நடைப்பயணம் புதிய அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் என தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பீகாரில் கல்வி மற்றும் சுகாதாரம் மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்