ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடரின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். அதன்படி ஒரு கிலோ பன்னீர் 420 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட நிலையில் தற்போது 550 ரூபாய்க்கு விற்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதாம் பவுடர் 200கிராம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.120 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.