வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நபரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, டீல் இம்தியாஸ் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டீல் இம்தியாஸ், சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார்.
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருப்பது போன்று வீடியோக்களை, சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அம்பலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமாரிடம் பணம் வழிப்பறி செய்ததாக டீல் இம்தியாஸ் மீது 2 வழக்குகளில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி நகர போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.