காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் குளக்கரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த அரிய வகை மர நாயை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோயில் குளக்கரையின் படிக்கட்டில் சுற்றித்திரிந்த இந்த மர நாயை செயற்கை இயந்திரம் உதவியுடன் கோணிப்பையில் மடக்கிப்பிடித்த தீயணைப்புத் துறையினர் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.