மயிலாடுதுறை மாவட்டம் சித்தர் காடு பகுதி சேர்ந்தவர் குமரேசன். இவரது தாயார் காலையில் வீட்டின் வெளிப்புற கதவை திறந்துபோது, கதவின் அருகே பாட்டிகள் சிதறி கிடந்துள்ளது. மேலும் வீட்டின் சுவர்கள் கருமையாகவும், அருகிலிருந்து செடி எரிந்த நிலையிலும் இருந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பீர் பாட்டிலில் மர்மநபர்கள் பெட்ரோலை கலந்து, வீட்டின் மேல் வீசி வெடிக்க செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.