"என்னை போல் நடிக்கும் நபர்.. அது நான் இல்லை.. நம்பிடாதீங்க" - பகீர் கிளப்பும் நடிகர் ரவி மரியா
ஆசை ஆசையாய், மிளகா ஆகிய திரைப்படங்களை இயக்கியதுடன், சரவணன் இருக்க பயமேன், தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரவி மரியா. சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், தென்மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் முகவரியை சிலர் உருவாக்கி, தனது நண்பர்களிடம் இருந்து மருத்துவ செலவுக்கு தேவைப்படுவதாக கூறி பணம் வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில நண்பர்கள் நேரடியாகத் தன்னைத் தொடர்பு கொண்டு பணம் வேண்டுமா எனக் கேட்டபோதுதான், இந்த மோசடி தெரிய வந்தது என்று ரவி மரியா தனது புகாரில் குறிப்பிட்டுளார். இந்த மோசடியில் தனது நண்பர்கள் எத்தனை பேர் பணத்தை இழந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.