அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி பிறந்தநாள் அன்றே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஃபலோ நகரை பனிப்புயல் புரட்டிப் போட்டு உள்ளது. 10க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 56 வயதான வில்லியம் க்ளே என்பவரும் உறைபனியால் உயிரிழந்துள்ளார். கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அவர் காணாமல் போனதாகவும், தனது பிறந்த நாள் அன்று அவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.