ஜவுளிக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்த நபர் ஓடி வந்த கும்பல் செய்த பதற வைக்கும் சம்பவம்..!

Update: 2022-07-29 06:46 GMT

தட்சிண கன்னடா மாவட்டம் நெட்டார் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரை மர்மநபர்கள் கடந்த 26ஆம் தேதி படுகொலை செய்தனர். மாநிலம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பதற்றை ஏற்படுத்தியது. இந்தச்சூழல் தணிவதற்கு முன்பே அதே மாவட்டத்தில் மற்றொரு படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. மங்களாபேட்டை பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் முகமது பாசில் என்பவர் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள், பாசிலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், சம்பவ இடத்திலையே பாசில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த படுகொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்