கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட நபர்...கமிஷனர் ஆபீஸ்-க்குள் நுழைந்ததால் பரபரப்பு - துணிச்சலாக தடுத்து நிறுத்திய பெண் காவலர்

Update: 2022-12-18 02:50 GMT

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திடீரென ஒரு வாலிபர் கை மற்றும் கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டு காயத்துடன் நுழைந்தார்.

உடனே பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அவரது கையில் வைத்திருந்த பிளேடை பறித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிளேடால் அறுத்துக்கொண்ட நபர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதனிடையே, தனது தந்தையை உதவி ஆய்வாளர் ஒருவர் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வந்ததாகவும் ஆனஸ்ட்ராஜ் தெரிவித்தார்.

முன்னதாக, அவர் கழுத்தை அறுத்து கொண்டு வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அவரை சமாதானம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்