youtube-ஐ மட்டும் பார்த்து கூலி தொழிலாளி மகன் நீட் தேர்வில் செய்த சாதனை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தங்கமணி தம்பதியினரின் மகன் அறிவு நிதி. இவர் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 525 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அப்பா , அம்மா இருவரும் கூலி வேலைக்கு செல்வதால் புத்தகம் கூட வாங்கி படிக்க முடியாத சூழ்நிலையில் மாணவன் அறிவுநிதி தவித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடங்களை வைத்தும், சமூக வலைதளமான யூட்யூபில் நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என, அறிவுநிதி படித்து வந்துள்ளான். இந்நிலையில், நீட் தேர்வில், 348 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாக வெற்றி பெற்றுள்ள மாணவன் அறிவுநிதிக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.