ஆசையாய் கட்டிய வீடு - கண் முன்னே கலைந்து கனவாகுதே - கண்ணீர் வடித்த குடியிருப்புவாசிகள்
காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 78 வீடுகளை இடிக்கும் பணிகள் துவங்கின. வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டித்தரப்பட்டன. அங்கு வீடு கிடைத்தவர்கள் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் இருந்த நிலையில், கரையை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து தாயார் குளம் பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பில் 78 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. பாதுகாப்பிற்காக அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பரபரப்பு நிலவியது.