பட்டியலின இளைஞரை அடித்து செருப்பை நக்க வைத்த அரசு ஊழியர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2023-07-10 03:56 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞரின் முகத்தில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம், பலரது கண்டனத்திற்கு ஆளாகியது. இதை அடுத்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரை தனது வீட்டிற்கு அழைத்து, அவரது காலை கழுவி, மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில், உத்தரபிரதேசத்தில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை, அரசு ஊழியர் ஒருவர் தனது காலணியை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் சோனபத்ரா மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக தேஜ்பலி சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் என்ற அந்த இளைஞர்... தனது மாமா வீட்டிற்கு வந்த போது, அங்கு ஏற்பட்ட மின்சார பிரச்சனையை சரி செய்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளில் உள்ள மின்சார பிரச்சனைகள் குறித்து அவரிடம் கூறி, சரி செய்து கொண்டுள்ளனர்.

இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மின்சாரத்துறையில் லைன்மேனாக பணியாற்றி வரும் தேஜ்பலி சிங் என்பவர் ராஜேந்திரனை கடுமையாக தாக்கியதோடு, அவரை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். அதோடு ராஜேந்திரனை தனது காலில் விழ வைத்து, காலணியை நாக்கால் நக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்